முதல்ல இன்னைக்கி நடந்த போட்டிகளைக் கொஞ்சம் பாக்கலாம்.
முதல் போட்டி: விக்டோரியா Vs செண்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ்
டாஸ் ஜெயிச்ச செண்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ், முதல்ல பேட்டிங் சூஸ் செஞ்சாங்க.
முதல் ஓவர்லயே ரெண்டு விக்கெட்டை சிடில் எடுக்கவும் இன்னைக்கி செ.டி அவ்வளவுதான்னு நினைச்சேன். ஆனா கேப்டன் ஹவும், சின்க்லேரும் கொஞ்ச நேரம் அடிச்சி ஆடினாங்க. ஆறாவது ஓவர்ல ஸ்கோர் 30 ரன்னா இருக்கும்போது சிங்க்லேரும் அவுட்டாகிட்டார். அதுக்கப்புறம் செ.டி கொஞ்சம் நிதானாமாவே ஆடினாங்க.
கடைசி நாலு ஓவர்ல ஹவ் ஆடின ருத்ர தாண்டவத்தால செ.டி 165 ரன் எடுத்தாங்க.20 ஓவர் முடியும் போது ஹவ் 55 பால்ல 77 ரன் எடுத்திருந்தார். (என்னய்யா பேரு, ஹவ், ஒர்க்கர் அப்பிடின்னு? நம்ம பேரப் பாத்து அவங்களும் அப்படித்தான் பேசுவாங்க)
அடுத்து ஆட வந்த புஷ்ரேஞ்சர்ஸ் (குசும்பன்: இப்ப என்ன செய்விங்க?) ஆரம்ப ஓவர்கள்ல அடிச்சி ஆடினாங்க. 5வது ஓவர்லயும் 7வது ஓவர்லயும் ஒவ்வொரு விக்கெட் விழவும் ரன் ரேட் குறைய ஆரம்பிச்சிடுச்சி. 14வது ஓவர்ல கேப்டன் ஹஸ்ஸியும் (டேவிட்) அவுட்டாகவும் ரன் ரேட் இன்னுமே குறைய ஆரம்பிச்சிடுச்சி.
கடைசியில 16 ஓவர் முடிவுல, 24 பந்துக்கு 48 ரன் எடுத்தா வெற்றி அப்பிடிங்கிற தர்மசங்கடமான நிலையில புஷ்ரேஞ்சர்ஸ் நின்னாங்க. அப்போ ஃபிஞ்சும், மெக்டொனால்டும் அடிக்க ஆரம்பிச்சாங்க. கடைசியா 2 பால் மிச்சம் இருக்கும்போது ஒரு சிக்ஸை சாத்தி வின் பண்ணாங்க. ஃபிஞ்ச் மேன் ஆஃப் த மேட்ச்.
கைல இருந்த மேட்சைக் கோட்டை விட்டதால கடைசியில டோர்னமெண்ட்ல இருந்து வெளியேற வேண்டிய நிலைக்குப் போயிட்டாங்க செ.டி. இன்னும் இருக்கிற ரெண்டு மேட்சும் அவங்களுக்கு ஜஸ்ட் ஃபார்மாலிட்டி தான்.
அடுத்த மேட்ச் வயாம்பா லெவன் Vs சென்னை சூப்பர் கிங்க்ஸ்.
கிரவுண்டு ஃபுல்லா இன்னைக்கி கேட்டுக்கிட்டே இருந்த பாட்டு
S U P E R K I NGS..
சென்னை இன்னைக்கி சேம்பியன்ஸ் மாதிரி ஆடினாங்க. டாஸ் போடமுன்னாடி தோனிக்கிட்ட டாஸ் ஜெயிச்ச என்ன செய்வனு கேட்டாரு கமெண்டேட்டர். அதுக்கு தோனி, நான் பேட்டிங் எடுப்பேன் அப்பிடினு சொன்னாரு. டாஸ் ஜெயிச்சது ஜெகன் முபாரக். அவரு உடனே ஃபீல்டிங் எடுத்தாரு. இதுக்கெதுக்கு டாஸ் போடணும்?
எனி வே, பேட்டிங் செய்ய வந்த சென்னை முதல்ல கொஞ்சம் தடுமாற்றமாத்தான் ஆரம்பிச்சாங்க. அதுலயும் ரெண்டாவது ஓவரை மெண்டிஸ் வீச வரவும் ஹெய்டன் ரொம்பவே திணறிப் போயிட்டாரு. ஆனா அடுத்த பக்கத்துல விஜய் அடிச்சாட ஆரம்பிச்சாரு. வெலகடர போட்ட அஞ்சாவது ஓவர்ல ஒரு சிக்ஸ், மூணு ஃபோர் அடிச்சாரு விஜய் (அஞ்சாவது பால் லெக் பை ஃபோர்).
ஆனா ஆறாவது ஓவர்ல ஹெய்டன் மெண்டிஸ் பால்ல அவுட்டாகி டக் அவுட்டுக்குத் திரும்பிட்டாரு. அதுக்கப்புறம் வந்தாரு ரெய்னா. ரெய்னாவும் வந்ததும் அடிக்க ஆரம்பிக்கலை. ஆரம்பத்துல திணறத்தான் செஞ்சாரு. அதிலயும் ஒரு ரன் அவுட் சான்ஸ் எல்லாம் குடுத்தாரு. அதுக்கடுத்த ஓவர்ல இருந்து ரெய்னாவும் விஜயும் போட்டி போட ஆரம்பிச்சிட்டாங்க. விஜய் அடிக்கிற ஓவ்வொரு ஷாட்டுக்கும் ரெய்னா பதிலடி அடிக்க ஆரம்பிச்சாரு. ரெண்டு பேரும் அடிச்சி நொறுக்குனதுல சென்னை ரசிகர்களுக்கு விருந்து, வயாம்பா ரசிகர்களுக்கு வயித்துக் கடுப்பு.
அதுலயும் சுரேஷ் ரெய்னா ஃபுல் டாஸ் பாலை எல்லாம் அடிச்ச அழகு இருக்கே.. ஆஹா.. காண கண் கோடி வேணும். மெண்டிஸ் போட வந்த கடைசி ஓவர்ல 4 சிக்ஸ் ரெண்டு டபுள் எடுத்தாரு சுரேஷ்.
அடுத்த ஓவர்ல எதோ லக்குல வெலகடரா சுரேஷ், விஜய் ரெண்டு பேரையும் அடுத்தடுத்த பந்துல அவுட்டாக்கிட்டார். அதுக்கப்புறம் வந்த மோர்க்கலும், தோனியும் நல்ல ஃபினிஷிங் குடுக்கலை. இருந்தாலும் ஸ்கோர் 200ஐத் தொட்டிருச்சி. ஒரு வேளை சுரேஷும், விஜயும் அவுட்டாகாம இருந்திருந்தாலோ இல்லை தோனியும் மோர்க்கலும் அவங்க வழக்கமான அதிரடியக் காட்டியிருந்தாலோ ஸ்கோர் 250 கூட போயிருக்கலாம்.
வயம்பா ஃபீல்டிங்க்ல ரொம்ப மோசமா இருந்தாங்க. நிறைய ஓட்டை விட்டாங்க. ரெண்டு கேட்ச் மிஸ். சென்னை பேட்டிங் செஞ்சிக்கிட்டு இருக்கும்போது மஹேல ஜெயவர்த்தன கிட்ட கமெண்டேட்டர்ஸ் என்ன ஸ்கோர் சேஸபிள்னு நினைக்கிறீங்கன்னு கேட்டதுக்கு, அவர் 150, 160னு சொன்னார். ஆனா 200ஐ எப்பிடி அடிப்பாங்க.
அடுத்து ஆட வந்த வயம்பா முதல் ஓவர்லயே ஒரு விக்கெட் இழந்துட்டாங்க. ஆனாலும் அந்த ஓவர்ல 14 ரன் எடுத்திருந்தாங்க. எடுத்து என்ன பிரயோஜனம். அடுத்த ஓவர்ல போலிஞ்சர் டைட் பண்ணிட்டாரு. அதுக்கடுத்த ஓவர்ல மோர்க்கல் இன்னும் ஒரு விக்கெட் எடுத்துட்டாரு. போலிஞ்சரோட ரெண்டாவது ஓவர்ல ஜெயவர்த்தனே அப்பர் கட் சிக்ஸ் அடிக்க ட்ரை பண்ண அது முரளி கையில கேட்சாப் போய் நின்னப்பவே வயம்பாவோட சேஸ் முடிவுக்கு வந்துருச்சி.
ஜெயவர்த்தனவும் போனதுக்கப்புறம் வெறும் ஃபார்மாலிட்டி தான் மிச்சம் இருந்தது. அதை அஷ்வினே செஞ்சி முடிக்க, முரளிக்கு ஓவர் குடுக்காமலே மேட்ச் முடிஞ்சிருமோன்னு பயந்தேன். நல்ல வேளை அவருக்கும் ஓவர் குடுத்தாங்க. வயம்பாவோட டெயில் தான் ரொம்ப நேரம் தாக்குப்பிடிச்சாங்க. மறுபடி அஷ்வின் வந்து முரளியோட பந்துல ரெண்டு சிக்ஸ் அடிச்ச மெண்டிஸை வீட்டுக்கு அனுப்பவும், முரளி ஒரு விக்கெட் எடுத்து வயம்பா 103 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகிட்டாங்க.
இன்னைக்கி முரளி பவுலிங்க்ல பெருசா சோபிக்கலைன்னாலும், ஃபீல்டிங்க்ல தீ மாதிரி இருந்தாரு. மூணு கேட்ச் பிடிச்சாரு. அதுல அஷ்வின் பால்ல அவர் தாவிப் பிடிச்ச அந்தக் கேட்சைப் பார்த்தா அவருக்கு 38 வயசுன்னு யாரும் சொல்ல மாட்டாங்க. அவரொட பந்து வீச்சில மெண்டிஸ் குடுத்த ஒரு கேட்சைப் பிடிக்கவும் பயங்கரமான டைவ் ஒன்னு அடிச்சார். ஆனா பிடிக்க முடியலை. பிடிச்சிருந்தா டோர்னமெண்டோட பெஸ்ட் கேட்சஸ்ல ஒண்ணாகியிருக்கும்.
என்னதான் சென்னை ரெண்டு மேட்சும் பயங்கரமா ஜெயிச்சிருந்தாலும், அவங்க ஆடின ரெண்டு டீமுமே சோப்ளாங்கி டீம். ஸ்ட்ராங்க் டீம்களான வாரியர்ஸும், விக்டோரியாவும் இன்னும் வெயிட்டிங்க். அதிலயும் இன்னைக்கி மேட்ச்ல ஜெயிச்சதன் மூலமா விக்டோரியா செமி ஃபைனல் போற வாய்ப்பை இன்னும் தக்க வச்சிக்கிட்டிருக்காங்க.
இனி நாளைக்கி நடக்கப் போற போட்டி
மும்பை இண்டியன்ஸ் Vs கயானா
ரெண்டு டீமுமே செமி ஃபைனல்ஸ் போறதுங்கிறது ரொம்ப கஷ்டம். எதாவது அதிசயம் நிகழ்ந்தாத்தான் உண்டு. அதுனால இந்த மேட்ச் வெறும் ஃபார்மாலிட்டி தான். இந்த மேட்ச்லயும் மும்பை ஜெயிக்க முடியலைன்னா கடைசி மேட்ச் விளையாடாமலே பொட்டியக் கட்டிடலாம்.









0 பேரு சொல்றாங்க..:
Post a Comment