முதல்ல இன்னைக்கி நடந்த போட்டிகளைப் பத்திப் பாப்போம்.
முதல் போட்டி - வயம்பா Vs வாரியர்ஸ்.
டாஸ் ஜெயிச்ச வயம்பா பேட்டிங் சூஸ் பண்ணாங்க. அதுக்கு அவங்க தல முபாரக் சொன்ன காரணம் - எங்க நாட்டுல பெரிய ஸ்கோர் போஸ்ட் பண்ணிட்டு அதை டிஃபண்ட் செஞ்சிதான் எங்களுக்குப் பழக்கம். நல்ல மேட்டர் தான். ஆனா இது அவங்க ஊர் இல்லைங்கிறது மறந்து போச்சு போல.
ஆமாங் மறந்துதானுங் போச்சு அப்பிடிங்கிற மாதிரி அவங்க டீமோட ஸ்டார் பேட்ஸ்மென் ஜெயவர்த்தனே ஸ்லிப்ல கேட்ச் குடுத்து டக் அவுட்டாகி டக் அவுட்டுக்குத் திரும்பிட்டாரு. இது போதாதுன்னு அதே ஓவர்லயே உதவத்தேவும் டக் அவுட்டுக்குப் போயிட்டாரு. அடுத்து வந்த முபாரக்கும் ஓப்பனிங் இறங்கின குலதுங்கவும் கொஞ்சம் அடிச்சி ஆடினாங்க. எட்டு ஓவர்ல 50 ரன் இருக்கும்போது முபாரக் அவுட்டாகிட்டாலும் அடுத்து வந்த பெரேராவும் களத்துல அடிச்சி ஆட ஆரம்பிச்சிட்டாரு. வாரியர்ஸும் அப்பப்ப விக்கெட் எடுத்துக்கிட்டே தான் இருந்தாங்க. கடைசியில 20 ஓவருக்கு ஒம்போது விக்கெட் போயி 153 ரன் எடுத்தாங்க வயம்பா.
அடுத்து ஆட வந்த வாரியர்ஸ் ரொம்ப க்ளினிக்கலா சேஸ் பண்ணாங்க. பிரின்ஸ் ஆரம்பத்துலயே அவுட்டாகிட்டாலும் அடுத்து வந்த இங்க்ராம் கேப்டன் ஜேக்கப்ஸ் கூட சேந்து நல்ல ரன் ரேட்ல சீரா கொண்டு போயிட்டு இருந்தாங்க. ஆஸ்கிங் ரேட் எப்பவுமே கரண்ட் ரன் ரேட்டை விட கீழ இருக்கிற மாதிரியே பாத்துக்கிட்டாங்க.
மெண்டிஸ் மேஜிக் வேலை செஞ்சி ஜேக்கப்ஸ் எட்டாவது ஓவர்ல அவுட்டாகிட்டாரு. 11வது ஓவர்ல இங்க்ராமும் அவுட்டானதும் கொஞ்சம் ரன் ரேட் குறைஞ்ச மாதிரி இருந்தது. இல்ல இல்ல, நான் இருக்கேன்லா அப்பிடின்னுட்டு பவுச்சர் விளாச ஆரம்பிச்சாரு. மெண்டிஸ் திரும்ப பந்து போட வர்றதுக்குள்ள முக்காவாசி மேட்ச் முடிஞ்சி போச்சி. 19வது ஓவர்லயே 154 ரன் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்துல ஜெயிச்சிட்டாங்க வாரியர்ஸ். காலிஸ் மட்டும் பெங்களூரு டீமுக்குப் போவாம வாரியர்ஸ் டீம்ல ஆடியிருந்தா, வாரியர்ஸ் இன்னும் ஸ்ட்ராங்கா இருந்திருக்கும் போல.
எனக்கென்னவோ இந்தத் தடவை சேம்பியன்ஸ் லீக் கப் வாரியர்ஸ்க்குத்தான்னு தோணுது.
இன்னைக்கி நடந்த இன்னொரு மேட்ச் - சென்னை சூப்பர் கிங்க்ஸ் Vs செண்ட்ரல் ஸ்டாக்ஸ்
மேட்ச் நடந்தது டர்பன்ல. டர்பன்ல இந்திய மக்கள் நிறைய இருக்கிறதால இன்னைக்கி மேட்ச் ஹவுஸ் ஃபுல்லா இருந்தது. நெறைய பேரு சென்னைக்கி சப்போர் செஞ்சாங்க.
டாஸ் ஜெயிச்ச தோனி பேட்டிங் சூஸ் பண்ணாரு. நல்ல டெசிஷன். ஆனா நல்ல முடிவில்லையோங்கிற மாதிரி ஃபர்ஸ்ட் ஓவர்லயே ஹெய்டன் அவுட்டு. அடுத்த ஓவர்ல ஒரு ஃபோர் அடிச்ச ரெய்னா எதிர்பாத்த மாதிரியே பவுன்ஸர் பாலுக்கு அவுட்டாகிட்டாரு. கொஞ்ச நேரம் பத்ரியும் விஜயும் போட்ட மொக்கையில பல பேருக்கு இது 20-20ஆ இல்லை டெஸ்ட் மேட்சான்னு டவுட் வந்திருக்கும். ஒருவழியா 9வது ஓவர்ல விஜய் அவுட்டாகிப் போனாரு.
அடுத்து நம்ம சீக்காவோட புத்திரன் அனிருத்தா இறங்கினாரு. நேத்தைய இடுகையிலயே சீக்காவோட புத்திரன் அப்பிடிங்கிறதுக்காகவே இவர சேத்திருக்காங்களோன்னு எழுதலாம்னு நினைச்சேன். நல்ல வேள எழுதலை. தல அவங்கப்பா மாதிரியே ஆடினாரு. இவரு வந்தப்புறம் தான் ரன் ரேட் சட சடன்னு ஏற ஆரம்பிச்சிச்சி. 11வது ஓவர்ல பத்ரி ஒரு அப்பர் கட் சிக்ஸ் அடிச்சாரு. நான் பத்ரி வேசத்துல சேவாக்கை கூட்டிட்டு வந்திட்டாங்க போலன்னு நினைச்சேன். அதுக்கப்புறம் ரெண்டு பேரும் சரவெடி வெடிச்சாங்க.
17வது ஓவர்ல 42 ரன்ல அனிருத்தா அவுட்டாகும்போது டீம் ஸ்கோர் 113. அதுக்கப்புறம் இறங்கினது மோர்க்கல். அவரு வந்ததும் பத்ரிய பேக் சீட்டுக்குத் தள்ளிட்டு பஸ்ஸ இவரே ஓட்ட ஆரம்பிச்சிட்டாரு. ஒரு வழியா கடைசி ஓவர்ல பத்ரி ஒரு அப்பர் கட் ஃபோர் அடிச்சி ஃபிஃப்டி போட்டு டீம் ஸ்கோரை 151க்குக் கொண்டு போனாரு. பத்து ஓவருக்கு 48 ரன் எடுத்திருந்த சென்னைக்கு 20 ஓவர்ல 151 கண்டிப்பா நல்ல ஸ்கோர் தான்.
போன ஐபிஎல் ஆரம்பத்துல பவுலிங்கே இல்லாத டீமா இருந்தது சென்னை. டக்கீ போலிஞ்சர் டீமுக்குள்ள வந்ததும் டீமோட ஷேப்பே மாறிடுச்சி. இப்போ நல்ல பவுலிங் லைன் அப் இருக்கிற டீமாயிடுச்சி சென்னை. அதுனால இந்த பிட்ச்ல 152 ரன் எடுக்கிறது செண்ட்ரல் ஸ்டாக்ஸ்க்கு கொஞ்சம் கஷ்டம் தான்.
ஆமாங்ணா சரிதாங்ணா, அப்பிடிங்கிற மாதிரி 4வது ஓவர், 5வது ஓவர், 6வது ஓவர்ல வரிசையா மூணு விக்கெட் போச்சி. எட்டாவது ஓவர்ல முரளி வந்தாரு. வந்த வேகத்துல இன்னும் ரெண்டு பேரை டக் அவுட்டுக்கு திருப்பி அனுப்பினாரு. அப்ப டீம் ஸ்கோர் 37/5.
பதினாலாவது ஓவர்ல ஸ்கோர் 49/6ன்னு இருக்கும்போது ஒரு காமெடி காண்ட்ரவர்ஸி நடந்தது. முரளி போட்ட முதல் பால் நோ பால் ஆனது. அந்தப் பந்தை பேட்ஸ்மென் தூக்கியடிச்சதும் அது கேட்ச் ஆகிட, பேட்ஸ்மென் நோ பால் சிக்னலை கவனிக்காம டக் அவுட்டுக்குத் திரும்பிக்கிட்டு இருந்தாரு. முரளி அவரை ரன் அவுட்டாக்க ட்ரை பண்ணாரு. ஆனா அம்பர்ஸ் அவுட் குடுக்கலை. ஆனா பாலை கேட்ச் பிடிக்க முன்னாடி அவங்க ஒரு ரன் ஓடிட்டாங்க. அடுத்த பால் ஃப்ரீ ஹிட்ல இன்னொரு பேட்ஸ்மெனும் தூக்கியடிக்க அதுவும் கேட்ச் ஆச்சி. ஆனா அவுட் இல்லை. ஆக ரெண்டு பால்ல ரெண்டு விக்கெட் விழுந்தும் ரெண்டும் அவுட் இல்லை.
அடுத்தடுத்து வந்தவங்க ஒரு ஃபோர் ரெண்டு ஃபோர்னு அடிச்சாலும் பெரிசா எதுவும் காண்ட்ரிப்யூட் பண்ண முடியாம 94 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகிட்டாங்க.
வழக்கமா சென்னை ஸ்லோவா ஸ்டார்ட் பண்ணுவாங்க. இந்தத் தடவை அவங்க முதல் மேட்சே ஜெயிச்சிட்டாங்க. இதுக்கப்புறம் எப்பிடி செய்யறாங்கன்னு பாப்போம்.
நாம நம்ம சாராய முதலாளியோட டீம் ஆடுற மேட்சையே முதல்ல பாப்போம்.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் Vs கயானா.
பெங்களூரு ஐபிஎல்ல மூணாவதா முடிச்சதால அவங்களுக்கும் இந்த சேம்பியன்ஸ் லீக்ல ஆட வாய்ப்புக் கிடைச்சிருக்கு. ஜேக் காலிஸும், டேல் ஸ்டெயினும் லோக்கல் (சவுத் ஆஃப்ரிகன்) ப்ளேயர்ஸ். அவங்களுக்கு பிட்ச் கண்டிஷன் நல்லாத் தெரியும். ரெண்டாவது ஐபிஎல் சீசன் சவுத் ஆஃப்ரிக்கால நடந்தப்போ பெங்களூரு ரன்னர் அப்பா வந்தது நினைவிருக்கும். அதுனால பெங்களூருவுக்கு லோக்கல் நாலெட்ஜ் கயானாவை விட அதிகம்னு சொல்லலாம். பவுலிங் பேட்டிங் எல்லாம் சரி விகிதத்துல கலந்து இருக்கு பெங்களூருல. காலிஸ், ராஸ் டெய்லர், கேமரூன் வொயிட், டேல் ஸ்டெயின் இவங்க நாலு பேருதான் ஃபாரின் ப்ளேயர்ஸா இருப்பாங்கன்னு நம்புறேன். ராகுல் ட்ராவிட், சச்சின் ப்ரூவ் பண்ணின மாதிரி எதுவும் செய்வாரான்னு பாக்கலாம். கும்ப்ளே காம்பெடிட்டிவ் கிரிக்கெட் ஆடி நாளாச்சி. சிங்கத்துக்கு இன்னும் பல்லு ஸ்ட்ராங்கா இருக்கான்னு பாக்கணும்.
கயானா சவுத் ஆப்ரிக்கால வந்து ஆடுறது இதுதான் ஃபர்ஸ்ட் டைம். இண்டர்நேஷனல் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிற ப்ளேயர்ஸ்னா சர்வானும் சேட்டர்கானும் மட்டும் தான். மத்தவங்க எல்லாம் புதுசு. இதுவே அவங்களுக்கு அட்வாண்டேஜாவும் இருக்கலாம். அவங்க எப்படி ஆடுவாங்கங்கிறதுக்கு நிறைய டேட்டா இருக்காது. அனலைஸ் பண்ணி அவங்க வீக்னெஸ் கண்டுபிடிக்கிறது கஷ்டம். இதுல ஜொனாதன் ஃபூ அப்பிடின்னு ஒரு ப்ளேயர் பத்தி ரொம்ப பெருசா பேசிக்கிறாங்க. இவரு வெஸ்ட் இண்டீஸ் T-20 போட்டிகள்ல அதிரடியா ஆடி பேர் வாங்கினாராம். அதே மாதிரி பெருசா பேசப்படற இன்னொரு ஆள் தேவேந்திர பிஷூ. இவரு லெக் ஸ்பின்னராம். விக்கெட் நிறைய எடுத்திருக்காராம். இவங்க ரெண்டு பேரும் ஷைன் பண்ணினாங்கன்னா ஈஸியா ஜெயிச்சிடும் கயனான்னு பெருசுங்க பேசிக்கிறாங்க.
ஆனா என்னோட கணிப்பு பெங்களூரு ஈஸியா ஜெயிச்சிரும்னு. யாரும் முட்டை மந்திரம் வச்சிறாம இருக்கணும்.
இன்னொரு போட்டி சவுத் ஆஸ்ட்ரேலியா Vs ஹைவெல்ட் லயன்ஸ்.
சவுத் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியாவோட 20-20 ரன்னர் அப். லயன்ஸ் சவுத் ஆப்ரிக்காவோட ரன்னர் அப். ஆஸி-நியூஸி போட்டிகள் இந்தியா-பாகிஸ்தான் மாதிரி சூடு பறக்கும்.
ஹை வெல்ட் லயன்ஸ் மும்பையை ஜெயிச்சி வந்திருக்காங்க. அதுனால கொஞ்சம் கெத்தா இருப்பாங்க. அதோட லோக்கல் பசங்கங்கிறதால லோக்கல் பிட்ச் கண்டிஷன்ஸ் நல்லாத் தெரிஞ்சிருக்கும். வாண்டியர், மெக்கென்ஸி திரும்பவும் ஒரு நல்ல பேட்டிங் குடுப்பாங்கன்னு எதிர்பார்க்கலாம்.
சவுத் ஆஸ்ட்ரேலியால தெரிஞ்ச முகம்னா அது ஷான் டெயிட் மட்டும் தான். மத்தவங்க எல்லாம் தெரியாத முகங்களா இருக்கு. அவங்க ஆஸ்திரேலியன் T20 ஃபைனலுக்கு வந்தாங்கன்னா அதுக்கு முக்கியமான காரணம் பொல்லார்டும் அஃப்ரிடியும். அவங்க ரெண்டு பேருமே இப்ப டீம்ல இல்லை. அதுனால சவுத் ஆஸ்திரேலியா எப்பிடி ஆடும்னு தெரியாது.
இந்தப் போட்டியிலயும் லயன்ஸே ஜெயிப்பாங்கன்னு நான் ஜோசியம் சொல்றேன்.
பிதற்றியது
முகிலன்
|
வகைப்படுத்துதல்
சேம்பியன்ஸ் லீக்
Subscribe to:
Post Comments (Atom)






0 பேரு சொல்றாங்க..:
Post a Comment